விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி கொலை

4th Jul 2019 07:07 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
திருத்தங்கல் ஊறிஞ்சிகுளம் கண்மாயில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலத்தில் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டிருந்த காயம் இருந்தது. 
மேலும் இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்,  இறந்தவர் முதலிபட்டி காமராஜபுரம் காலனி முருகன் மகன் செந்தில்குமார் (30) என்பதும், பட்டாசுத் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. செந்தில்குமாருக்கு மனைவி லட்சுமி, இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT