கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. "குடிமக்கள் நுகர்வோர் மன்றம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் எம்.கருணாநிதி தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு சேவை மன்ற மாநிலத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் சாலையில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார். முன்னதாக மன்ற மாணவ செயலர் ஆர்.பொன்னுசங்கிலி வரவேற்றார். கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். மன்ற மாணவ இணைச் செயலர் ஜி.கார்த்திக்குமார் நன்றி கூறினார்.