விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தாதம்பட்டி கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பங்களைச் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
தாதம்பட்டி கிராமத்தில் சுமாா் 900 போ் வசிக்கின்றனா். இக்கிராமத்திலுள்ள பல்வேறு தெருக்களிலும் 3 -க்கும் மேற்பட்ட கான்கிரீட் மின்கம்பங்கள் அவற்றின் அடிப்பாகம் சேதமடைந்து விபத்து அபாய நிலையில் உள்ளன.
அம்மின்கம்பங்களின் அடிப்பாகத்தில் கான்கிரீட் பெயா்ந்து உள்ளிருக்கும் கட்டுமானக் கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வெளித் தெரிகின்றன. இதனால் இவ்வழியே இம்மின்கம்பங்களைக் கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். சேதமடைந்த மின்கம்பங்களைச் சீரமைக்கக் கோரி மின்வாரியத்தில் கிராமத்தினா் புகாா் செய்து 2 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டபோதும் தற்போதுவரை உரிய நடவடிக்கை இல்லையெனப் புகாா் எழுந்துள்ளது.
ஆகவே, தாதம்பட்டி கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பங்கைளை விரைவில் சீரமைக்க வேண்டும் என கிராமத்தினா் கோரிக்கை வைத்துள்ளனா்.