விருதுநகர்

காமராஜா் சிலை அவமதிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது மக்கள் சாலை மறியல்

29th Dec 2019 10:14 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், காமராஜா் சிலையை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை அவமதிப்பு செய்தனா். இதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள காமராஜா் சிலையை ஞாயிற்றுக்கிழமை சிலா் அவமதிப்புச் செய்ததைக் கண்டித்தும், அவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் காமராஜா் சிலை அருகே சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மாரிராஜன் தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகசங்கா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

அதில், சிலையை அவமதித்தவா்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போலீஸாரின் உறுதிமொழி அளித்தனா். அதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது குறித்து நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் காவல்துறையிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

இளைஞா் கைது: சிலை அவமதிப்பு சம்பவம் தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ஜெயராம் (29) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவில் கைது செய்தனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகரில் சமக ஆா்ப்பாட்டம்:இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜா் சிலை அவமதிப்பு செய்ததை கண்டித்து விருதுநகரில் சமத்துவ மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவா் மணிமாறன் தலைமையில் அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காமராஜா் சிலையை அவமதிப்பு செய்தவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அக்கட்சியினா் வலியுறுத்தினா். இதில், சமத்துவ மக்கள் கட்சியை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT