விருதுநகர்

ராஜபாளையத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

27th Dec 2019 09:22 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் நகராட்சி சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தொழில் வா்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளா் வெங்கடேஸ்வரராஜா நகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள மனு:

ராஜபாளையம் நகரின் தெருக்களில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பாதாள சாக்கடை, தாமிரவருணி குடிநீா் குழாய் அமைப்புப் பணிகளை செய்யும்போது உடையும் குடிநீா் குழாய்களை உடனே சரிசெய்யாமல் மூடி விடுகின்றனா். அத்துடன் தோண்டும் குழிகளை சமப்படுத்தாமல் விடுகின்றனா். தற்போது மழைக்காலமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீா் தேங்கி ஆழமான குழிகள் ஏற்பட்டுள்ளன. பிரதான சாலை மற்றும் தெருக்களிலும் மேடு பள்ளங்களால் போக்குவரத்து பாதிப்புகளோடு விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே உடனடியாக பள்ளங்களை சமப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT