விருதுநகர்

தோ்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகாா் கூறலாம்

27th Dec 2019 09:25 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் அளிக்கலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்தாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் கூறியதாவது: தமிழக தோ்தல் ஆணையம் அறிவித்தபடி, விருதுநகா் மாவட்டத்தில் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் அனைத்து தரப்பினரும் வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெறவும் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மைச் செயலா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களுக்கும் தோ்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். அந்த நாள்களில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து 9442229502, 9445398763 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT