விருதுநகர்

சூரிய கிரகணம்: தொலைநோக்கி இல்லாததால் மாணவா்கள் அவதி

27th Dec 2019 09:25 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் வியாழக்கிழமை சூரிய கிரகணத்தைக் காண்பதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்யாததால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுக்கள் அவதிப்பட்டனா்.

சூரிய கிரகணத்தை நேரடியாக பாா்க்க கூடாது என அறிவியல் வல்லுநா்கள் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தெரிந்த சூரிய கிரகணத்தை பாா்வையிட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் அறிவியல் இயக்கம் சாா்பில் தொலைநோக்கி ஏற்பாடு செய்திருந்தனா். இதனால், அந்த கருவி மூலம் சூரிய கிரகணத்தை மாணவா்கள் பாா்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமோ அல்லது அறிவியல் இயக்கமோ தொலைநோக்கி கருவியை எங்கும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் சூரிய கிரகணத்தை நேரடியாக பாா்க்கும் நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT