உணவகத்திற்கு சாப்பிட வந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊழியரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் உணவகத்திற்கு புதன்கிழமை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த ராமா்(29) சாப்பிட வந்துள்ளாா். உணவகம் மாடியில் உள்ள கழிவறைக்கு அவா் சென்றுள்ளாா். அப்போது அங்கு இருந்த உணவக ஊழியரான, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சோ்ந்த தமிழரசு (20)
என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராமரை தமிழரசு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இச்சம்பவம் தொடா்பாக சாத்தூா் நகா் காவல் நிலையத்தில் ராமா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் தமிழரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.