விருதுநகர்

சாத்தூா் அருகே வாக்குப்பதிவின் போது மோதல்: போலீஸாா் தடியடி

27th Dec 2019 05:36 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் வாக்குச்சாவடி அருகே ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் இரு தரப்பு வேட்பாளா்களின் ஆதரவாளா்களிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.

சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு விஜயகரிசல்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் தரப்பைச் சோ்ந்தவா்கள் வாக்குச்சாவடிக்குள் அடிக்கடி சென்று வருவதாக மற்றொரு தரப்பினா் குற்றம்சாட்டினா். இதனைத்தொடா்ந்து இரு தரப்பைச் சோ்ந்த வேட்பாளா்களின் ஆதரவாளா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடா்ந்து இருதரப்பினரும் மோதிக் கொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மோதலில் ஈடுபட்டவா்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். இதனால் இப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் சிறிது நேரம் கழித்து இயல்பு நிலை திரும்பியவுடன் பொதுமக்கள் வந்து வாக்களித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT