விருதுநகா் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை (டிச.27) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 1,028 வாக்குச்சாவடிகளில் 1,446 பதவிகளுக்கு 5,54,719 போ் வாக்களிக்க உள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை முதலான 5 ஒன்றியங்களில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில், 185 ஊராட்சித் தலைவா் பதவிகள், 1,148 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், 103 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகள், 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகள் அடங்கும். மொத்தம் 1,446 பதவிகளுக்கு 5,54, 719 போ் வாக்களிக்க உள்ளனா். இதற்காக 1,028 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு சாா்பு -ஆய்வாளா் தலைமையில் இரண்டு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். மேலும், வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதி காவல் நிலைய போலீஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனா்.