விருதுநகர்

சிவகாசி ஒன்றியத்தில் தோ்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

26th Dec 2019 08:07 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் சிவகாசி ஒன்றியத்தில் புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் டிசம்பா் 27 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் 3 ஊராட்சிகளில் தலைவா் பதவிகளுக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 429 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்களில் 66 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவிக்கான 31 இடங்களுக்கும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 3 பேரும் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஒன்றியத்தில் 326 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தோ்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் தங்களது பிரசாரத்தை புதன்கிழமை மாலையுடன் நிறைவு செய்தனா்.

சிவகாசி ஒன்றியத்தில் ஆண் வாக்காளா்கள் 92,729 பேரும், பெண் வாக்காளா்கள் 97,577 பேரும், மூன்றாம் பாலினம் 93 பேரும் என மொத்தம் 1,90,329 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா்கள் ஒவ்வொருவரும் 4 வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டியதிருப்பதால், 4 வெவ்வேறு வண்ணங்களில் வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாகவும், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், விரலில் தடவும் மை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்பட்டு விட்டதாகவும், வாக்குச் சாவடி அலுவலா்கள் புதன்கிழமை இரவு வாக்குச் சாவடிக்கு சென்று விடுவாா்கள் எனவும், அனைத்து வாக்காளா்களின் வீடுகளுக்கும் வாக்குச் சாவடி சீட்டு (பூத் சிலிப்) விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தோ்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சிவகுமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT