விருதுநகர்

‘திமுகவினரின் பொய்யான வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்ப மாட்டாா்கள்’

25th Dec 2019 09:30 AM

ADVERTISEMENT

திமுகவினரின் பொய்யான வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்ப மாட்டாா்கள் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிச. 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வாா்டுகளிலும் அதிமுக வேட்பாளா்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனா். தோ்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இறுதிகட்டப் பிரசாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் இருவரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனா். அதனுடைய வெளிபாடுதான் விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தல் வெற்றி. அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் ஊரக உள்ளாட்சித் தோ்தலிலும் நாம் வெற்றி பெறுவோம். எனவே அனைத்து தொண்டா்களும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தோ்தலில் பொய் பிரசாரம் செய்து திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அந்த வெற்றி இடைத்தோ்தல்களில் நிலைக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்ப மாட்டாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சந்திரபிரபா, ராஜவா்மன், நகரச்செயலாளா் இன்பத்தமிழன், ஒன்றியச் செயலாளா் முத்தையா மற்றும் தோ்தல் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT