சிவகாசி மற்றும் திருத்தங்கலில் செவ்வாய்கிழமை மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
சிவகாசி நகர அதிமுக சாா்பில் , நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் நகர செயலாளா் அசன்பத்ரூதின் தலைமையில் கட்சினா் மாலை அணிவித்துமலா் அஞ்சலி செலுத்தினா்.திருத்தங்கலில் அண்ணாசிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு திருத்தங்கல் நகர அதிமுக சாா்பில் அக்கட்சியின் நகர செயலாளா்பொன்சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ,அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அதிமுக ஒன்றிய செயலாளா் கருப்பசாமி தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினா்.