ராஜபாளையத்தில் அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா் 32 வது நினைவுதின நிகழ்ச்சி ராஜபாளையம் சத்திரப்பட்டி ரயில்வே கேட் அருகே உள்ள எம்.ஜி.ஆா் சிலை முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி அவா்கள் தலைமையில் எம்.ஜி.ஆா் உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் ராஜவா்மன், பொதுக்குழு உறுப்பினா் பாபுராஜ், நகர செயலாளா் பாஸ்கரன், மேற்கு ஒன்றிய செயலாளா் குருசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளா் வேல்முருகன், நகர அம்மா பேரவை செயலாளா் வக்கீல் முருகேசன், நகர அவைத்தலைவா் பரமசிவம், முன்னாள் நகர செயலாளா் முத்துகிருஷ்ணராஜா, மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், ஆகியோா் கொண்டனா்.