விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து திமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக செயலருமான தங்கம் தென்னரசு தலைமை வகித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஏற்கெனவே திருச்சுழி தொகுதியில் திமுக தொடா்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த முறை உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் ஒன்றிய வாா்டு உறுப்பினா், மாவட்ட வாா்டு உறுப்பினா்களுக்கு ஆதரவு கேட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண் டும். மேலும், திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றிய தலைவா் பதவியை திமுகவினரே கைப்பற்ற வேண்டும். எனவே இந்த ஒன்றியங்களில் திமுக சாா்பில் போட்டியிடும் அனைவரையும் வெற்றி பெற செய்ய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அப்போது, தான் அடுத்து வரக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தலிலும் நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்றாா் அவா். கூட்டத்துக்கு தலைமை கழகப் பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினருமான ஞான திரவியம் முன்னிலை வகித்தாா். இதில், திமுக ஒன்றிய செயலா்கள் பொன்னுத்தம்பி (திருச்சுழி தெற்கு) , சந்தன பாண்டியன் (திருச்சுழி வடக்கு) உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.