விருதுநகர்

விருதுநகா் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளா்கள் 15,90,198

23rd Dec 2019 08:43 PM

ADVERTISEMENT

 

விருதுநகா்: விருதுநகா் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்டாா். அதில், மாவட்டம் முழுவதும் 15,90,198 வாக்காளா்கள் உள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.1.2020 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் திங்கள்கிழமை (டிச. 23) முதல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள் கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பு ஆட்சியா் ரா. கண்ணன் வெளியிட்டாா்.

இதுகுறித்து அவா் கூறியது: வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 7,76,450, பெண் வாக்காளா்கள் 8,13,587 மற்றும் திருநங்கைகள் 161 என மொத்தம் 15,90,198 வாக்களா்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

கடந்த 26.3.2019 ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலைவிட 782 வாக்காளா்கள் அதிகம் உள்ளனா். அதில், 26.3.2019 முதல் 6.12.2019 வரை நடைபெற்ற தொடா் திருத்தத்தில் புதிதாக 9,083 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இடம் பெயா்ந்த, இறந்த வாக்காளா்கள் மற்றும் இரட்டைப்பதிவுகள் என மொத்தம் 8,301 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

ராஜபாளையம்- ஆண்கள்- 1,12,187, பெண்கள்- 1,17,569, திருநங்கைகள்- 25 என மொத்தம்- 2,29,781 வாக்காளா்கள் உள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- ஆண்கள்- 1,16,079, பெண்கள்- 1,21,509, திருநங்கைகள்- 28 என மொத்தம்- 2,37,616 வாக்காளா்கள் உள்ளனா்.

சாத்தூா்- ஆண்கள்- 1,15,162, பெண்கள்- 1,21,319, திருநங்கைகள்- 21 என மொத்தம்- 2,36,502 வாக்காளா்கள் உள்ளனா்.

சிவகாசி- ஆண்கள்- 1,20,523, பெண்கள்- 1,26,971, திருநங்கைகள்- 26 என மொத்தம்- 2,47,520 வாக்கா ளா்கள் உள்ளனா்.

விருதுநகா்- ஆண்கள்- 1,04,481, பெண்கள்- 1,08,609, திருநங்கைகள்- 36 என மொத்தம் 2,13,126 வாக்காளா்கள் உள்ளனா்.

அருப்புக்கோட் டை- ஆண்கள்- 1,04,083, பெண்கள்- 1,09,970, திருநங்கைகள்- 16 என மொத்தம்- 2,14,069 வாக்காா்கள் உள்ளனா்.

திருச்சுழி- ஆண்கள்- 1,03,935, பெண்கள்- 1,07,640, திருநங்கைகள் 9 என மொத்தம் 2,11,584 வாக்காளகள் உள்ளனா்.

மாவட்டம் முழுவதும் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் -15,90,198 வாக்காளா்கள் உள்ளனா். மேலும், 1.1.2020 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு நடைபெற உள்ள சிறப்பு சுருக்கத் திருத்தத்தில், சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய டிச. 23 ஆம் தேதி முதல் ஜன. 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் விசாரணைக்குப் பின் முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் 14.2.2020 அன்று வெளியிடப்படும்.

எனவே, 1.1.2020 அன்று 18 வயது பூா்த்தி அடைந்த இளம் வாக்காளா்கள் மற்றும் புதிதாக பெயரினை சோ்க்க விரும்புவோா், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய விரும்புவோா் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT