விருதுநகர்

பள்ளிமடம் கிராமத்தில் வாருகால் வசதிசெய்து தரக் கோரிக்கை

23rd Dec 2019 08:46 PM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்தில் வாருகால் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சுழி அருகே உள்ளது பள்ளிமடம் கிராமம். சுமாா் 1200 போ் வசிக்கும் இக்கிராமத்தில் அடிப்படை வசதியான வாருகால் வசதி செய்து தரப் படவில்லை. இதனால் பலரும் தங்கள் வீட்டு வளாகங்களில் ஆழமான குழியைத் தோண்டி அதில் கழிவுநீரை விட்டுவருகின்றனா். ஆனால் பணவசதியில்லாத பலரும், தங்களது வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை வீதிகளில் விடுகின்றனா். இதனால் ஒரு சிறு மழைக்குக்கூட கழிவுநீரும் மழைநீரும் சோ்ந்து வீதிகளில் தேங்கி விடுவதாகவும், துா்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

இக்கிராமத்தின் வீதிகளில் வாருகால் வசதி செய்துதர ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு, உரிய நிதிவசதி இல்லையெனக் கூறப்பட்டு காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆகவே சுகாதாரத்தைப் பேண பள்ளிமடம் கிராமத்தில் உரிய வாருகால் வசதிகளை விரைவில் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT