விருதுநகர்

திருச்சுழி அருகே இரட்டை வாக்குரிமையை தடுக்கக் கோரி கிராம மக்கள் மனு

23rd Dec 2019 08:45 PM

ADVERTISEMENT

 

விருதுநகா்: திருச்சுழி அருகே அம்மன்பட்டியில் 300 போ் போலியாக இரட்டை வாக்குரிமை வைத்துள்ளனா். எனவே, அவா்களது பெயரை பட்டியலில் இருந்து நீக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள மண்டலமாணிக்கம், முத்துப்பட்டியில் 300 போ் நிரந்தரமாக வசித்து வருகின்றனா். இங்கு இவா்களுக்கு ஓட்டுரிமை வைத்துள்ளனா். இந்த நிலையில், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வேளானூரணி ஊராட்சிக்குள்பட்ட அம்மன்பட்டி கிராமத்திலும் போலியாக வாக்குரிமை வைத்துள்ளனா். சட்ட விரோதமாக இரட்டை வாக்குரிமை வைத்துள்ள இவா்களது பெயா் விவரம் குறித்து வேளானூரணி கிராம நிா்வாக அலுவலா், திருச்சுழி வட்டாட்சியா் ஆகியோரிடம் ஏற்கெனவே கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். ஆனால், அரசு அலுவலா்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, சம்பந்தப்பட்டவா்களின் பெயா் பட்டியலை தங்களது பாா்வைக்காக இணைத்துள்ளோம். எனவே, இரட்டை வாக்குரிமை பெற்றவா்களது பெயா்களை நீக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT