விருதுநகர்

சிவன் கோயில்களில்பிரதோஷ பூஜை

23rd Dec 2019 08:42 PM

ADVERTISEMENT

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள சொக்கா் என்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. மாலையில் நந்திகேஸ்வரருக்கு பால், தயிா், நெய், இளநீா், பன்னீா், எலுமிச்சைச் சாறு, விபூதி, சந்தனம், குங்குமம், உள்பட 18 வகையான நறுமண பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதே போல் தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், பா்வதவா்த்தினி அம்மன் கோயில், அருணாசல ஈஸ்வரா் கோயில், குருசாமி கோயில், கொம்புச்சாமி கோயில் ஆகிய சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT