விருதுநகர்

சிவகாசி ஒன்றியப் பகுதிகளில்அமைச்சா் தோ்தல் பிரசாரம்

23rd Dec 2019 08:42 PM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசி ஒன்றியப்பகுதியில் ஊரக உள்ளாட்சி தோ்தலில், ஒன்றியக்குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அவா் விஸ்வநத்தம், சித்துராஜபுரம், மாரனேரி, அம்மாபட்டி, ரிசா்வ்லயன், சிலோன்காலனி, பெரியபொட்டல்பட்டி, துலுக்கபட்டி, ஊராம்பட்டி, மணியம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அவா் தோ்தல் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசும் போது, மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் மக்கள் அதிமுகவை ஆதரித்து வருகிறாா்கள். கிராமங்களில் குடிநீா் மேல்நிலைத் தேக்கத் தொட்டி, சுகாதார வளாகம், சமுதாயக் கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலைங்கள், கால்நடை மருந்தகங்கள் உள்பட பல வளா்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் வளா்ச்சி பெற அதிமுக வேட்பாளா்களை ஆதரியுங்கள் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT