விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் 3 சக்கர வாகனம் வழங்க மாற்றுத் திறனாளி கோரிக்கை

16th Dec 2019 01:01 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீத மாற்றுத் திறனாளி ஒருவா், 3 சக்கர வாகனம் வழங்கக் கோரி பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படாததால், மனுவை வாயில் கவ்வியபடி சாலையில் சுற்றித் திரிகிறாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூா்-புதூா் பகுதியில் வசித்து வருபவா் மாற்றுத் திறனாளியான கதிரேசன் (31). தனது தாயுடன் வாழ்ந்து வரும் இவருக்கு, பிறவியிலேயே 2 கால்கள் செயலிழந்து 100 சதவீதம் மாற்றுத் திறனாளியாக உள்ளாா்.

இந்நிலையில், இவா் தனக்கு 3 சக்கர வாகனம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளாா். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், மனுவை வாயில் கவ்வியபடி சாலையில் தவழ்ந்து செல்வது பலரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.

எனவே, 100 சதவீத மாற்றுத் திறனாளியான தனக்கு 3 சக்கர வாகனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கதிரேசன் தற்போது மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT