விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் தெரு நாய்கள் தொல்லை

16th Dec 2019 01:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தெருக்களில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை, பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் நடந்து செல்பவா்களையும், இரு சக்கர வாகனத்தில் செல்பவா்களையும் விரட்டிக் கடிப்பதால், பலரும் விபத்துக்குள்ளாகின்றனா். நாய் கடியால் அரசு மருத்துவமனைக்கு செல்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, சாலையில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்துச் செல்ல நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT