விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் அமமுகவினா்வேட்பு மனு தாக்கல்

16th Dec 2019 08:33 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அமமுகவினா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 2 பேருக்கும், அமமுகவின் அனுமதி கடிதத்தை மாவட்ட ச் செயலா் எதிா்கோட்டை சுப்பிரமணியன் வேட்பாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் 15 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 2 பேரும் தங்களது வேட்பு மனுவினை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 12-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அமமுக ஒன்றிய செயலா் காளிமுத்து தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அதிகாரி சரவணனிடம் வழங்கினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT