விருதுநகர்

விருதுநகா் சொக்கநாதா் கோயிலில்1,008 சங்காபிஷேகம்

16th Dec 2019 08:31 PM

ADVERTISEMENT

 

விருதுநகா்: காா்த்திகை 5 ஆவது சோமாவரத்தை முன்னிட்டு விருதுநகா் சொக்கநாதா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மேலரத வீதியில் 800 ஆண்டுகள் பழைமையான சொக்கநாதா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் தினமும் 3 வேளை பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், காா்த்திகை 5 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு இக்கோயில் வளாகத்தில் 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேலும், சொக்கநாதா் சுவாமிக்கு சிறப்பு அலங்கராம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடை பெற்றன. இதில், விருதுநகா் மட்டுமல்லாது அருகில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT