விருதுநகர்

விருதுநகரில் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரிபள்ளியை முன்னாள் மாணவிகள் முற்றுகை

16th Dec 2019 08:34 PM

ADVERTISEMENT

 

விருதுநகா்: விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2017- 2018 ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணி வழங்கக் கோரி அப்பள்ளியை திங்கள்கிழமை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டனா்.

விருதுநகரில் அரசு உதவி பெறும் சத்திரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2017-2018 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவிகளுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்பட வில் லை. இந்த நிலையில், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் திங்கள்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு சென்று விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரினா். அப்போது, அங்கு வந்த கல்வி அலுவலா்கள் மற்றும் போலீஸாா் மாணவிகளை சமாதானப்படுத்தி பள்ளிக்கு சென்று மடிக்கணினியை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினா். ஆனால், பள்ளியிலோ மடிக்கணினி இல்லாததால் மாணவிகளுக்கு வழங்க வில்லை. இதனால், சுமாா் 60 க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டனா். தகவல் அறிந்து வந்த பஜாா் போலீஸாா் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், விரைவில் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும். இது குறித்து அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT