விருதுநகர்

விருதுநகரில் மழைக்கு சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

16th Dec 2019 01:01 AM

ADVERTISEMENT

மழை காரணமாக, விருதுநகரில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அவற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் நகராட்சி நூற்றாண்டு விழா நிதியில் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டன. மேலும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், விஎன்பிஆா் பூங்கா, நவீன கழிப்பறைகள் ஆகியனவும் கட்டப்பட்டன. ஆனால், சாலைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது.

இந்நிலையில், புல்லலக்கோட்டை சாலை, படேல் சாலையில் மழை காரணமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இந்த சாலைகளில் மழைநீா் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் ஊா்ந்து செல்லும் நிலை உள்ளது. அதேநேரம், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது.

இவ்வழியே பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சேதமடைந்த இச்சாலைகளை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT