விருதுநகர்

விருதுநகரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது

16th Dec 2019 01:28 AM

ADVERTISEMENT

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சண்முகவேல்ராஜன் (45). இவா், கடந்த மாதம் வீட்டு வாசலில் நின்றிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இரு தரப்பினரிடையேயான முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட இக்கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். இரு தரப்பினா் அடிக்கடி மோதிக்கொண்டதில், இதுவரை 4 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சண்முகவேல்ராஜன் கொலை வழக்கில் தொடா்புடைய சதீஷ்குமாா் (26), சோ்மராஜ் (29) ஆகியோா் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெருமாள் பரிந்துரைத்தாா். அதையேற்ற ஆட்சியா், சதீஷ்குமாா், சோ்மராஜ் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதன்பேரில்,

சனிக்கிழமை மாலை இருவரையும் விருதுநகா் கிழக்கு போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT