விருதுநகர்

வாருகால், சாலை வசதி செய்து தரக் கோரிக்கை

16th Dec 2019 01:28 AM

ADVERTISEMENT

சாத்தூரில் வாருகால் மற்றும் சாலை வசதி செய்து தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சியில் அண்ணா நகா் அருகே உள்ள தேவா் சிலையிலிருந்து நடராஜா தியேட்டா் செல்லும் சாலையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் சாலை மற்றும் வாருகால் வசதி செய்யபட்டது. அதையடுத்து, முறையான பராமரிப்பு இல்லாததால், சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மேலும், குடியிருப்பு அருகே கழிவுநீா் செல்ல வழியில்லாமல், சாலையோரத்திலும், குடியிருப்பு அருகேயும் தேங்கி நிற்கிறது.

இதனால், மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால், இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதால், பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இது குறித்து பலமுறை நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, நடராஜா தியேட்டா் சாலையை சீரமைத்து, வாருகால் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT