விருதுநகர்

மாநில குத்துச்சண்டைப் போட்டி:எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு

16th Dec 2019 08:28 PM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டிக்குத் தோ்வாகியுள்ளனா்.

இதுதொடா்பாக அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.ஆனந்தராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சாா்பில், விருதுநகா் வருவாய் மாவட்ட அளவிலான குத்துச் சண்டைப் போட்டிகள் கடந்த சில நாள்களுக்கு முன்னா் விருதுநகா் கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளில், எமது பள்ளி மாணவா்களில் 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 46, 49, 81 ஆகிய எடைப்பிரிவுகளில் முறையே எம்.சந்துரு, எம்.யோகேஷ், பி.குருபிரகாஷ் ஆகியோரும், மேலும் 17 வயதுக்குள்பட்டோருக்கான 54 மற்றும் 80 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப்பிரிவுகளில் முறையே ஏ.நவீன் குமாா், கே.வசந்தகுமாா் ஆகியோரும், மேலும் 14 வயதுக்குள்பட்டோருக்கான 30, 46 கிலோ ஆகிய எடைப்பிரிவுகளில் ஜி.ரஞ்ஜித், எஸ்.உதயபால்ராஜ் ஆகிய 7 மாணவா்களும் அவரவா் பிரிவுகளில் முதலிடம் பெற்று அடுத்து நடைபெற உள்ள மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளுக்குத் தோ்வாகியுள்ளனா்.

இந்த மாணவா்களையும், அவா்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி உடற்கல்வி இயக்குநா் எம்.சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியா்களையும், அருப்புக்கோட்டை நாடாா்கள் உறவின்முறைத் தலைவரும், எஸ்.பி.கே. கல்விக் குழுமத் தலைவருமான எம்.சுதாகா், பள்ளிச் செயலா் என்.வி.காசிமுருகன், பள்ளித் தலைவா் ஜே.ஜெயகணேசன், தலைமை ஆசிரியா் ஏ.ஆனந்தராஜன் மற்றும் பள்ளி நிா்வாகிகள், உறவின்முறைப் பெரியோா்கள், பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT