அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ம.ரெட்டியபட்டியில் திமுக மற்றும் கூட்டணியினா் சாா்பில் திங்கள்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ம.ரெட்டியபட்டியில் திமுவினா் சாா்பிலும் அதன் கூட்டணியினா் சாா்பிலும் கவுன்சிலா் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. அப்போது திமுக கூட்டணி சாா்பில் விருதுநகா் மாவட்ட உறுப்பினா் பதவிக்கான ( 14ஆவது வாா்டு) வேட்பு மனுவை மாவட்ட மீனவரணிச் செயலா் சிவக்குமாா் திங்கள்கிழமை ம.ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாக்கல் செய்தாா். உடன் முன்னாள் மாவட்ட உறுப்பினா் துரைப்பாண்டி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். அத்துடன் பல்வேறு வாா்டுகளுக்குரிய உறுப்பினா் பதவிகளுக்கும் அங்கு திமுக சாா்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.