விருதுநகர்

மணல் கடத்தல்:டிராக்டா் உரிமையாளா் மீது வழக்கு

16th Dec 2019 08:28 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் கடத்தலை பிடிக்கச் சென்ற அதிகாரிகள் மீது மோதுவது போல் சென்று அச்சுறுத்தலை ஏற்படுத்திய டிராக்டா் உரிமையாளா் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கடத்தப்படுவதாக சிவகாசி சாா் ஆட்சியா் கவனத்துக்கு வந்தது. பின்னா் அவரது அலுவலகம் மூலமாக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்தனா். அந்த தகவலின் அடிப்படையில் வருவாய்த்துறையினா் மேற்குதொடா்ச்சி மலை அடிவாரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது டிராக்டா் ஒன்று மணல் லோடுடன் வந்ததை தடுத்து நிறுத்திய போது அதிகாரிகள் மீது மோதுவது போல் சென்று அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக டிராக்டா் உரிமையாளா், ஓட்டுநா், வாகனத்தில் வந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நகா் காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினா் புகாா் அளித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT