விருதுநகர்

மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகளுக்குகாப்பீடு செலுத்த டிச. 20 கடைசி

16th Dec 2019 08:27 PM

ADVERTISEMENT

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி மற்றும் பயறு வகைகளான சோளம், கம்பு, ராகி, பசிப்பயறு, உளுந்து, துவரை முதலான பயிா்களுக்கு காப்பீடு செலுத்த டிச. 20 ஆம் தேதி கடைசி நாள் என வேளாண் இணை இயக்குனா் ஜெயலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.365, பருத்தி ரூ. 1,135, சோளம் ரூ.164, கம்பு ரூ.150, ராகி ரூ.140 மற்றும் பாசிப்பயறு, உளுந்து, துவரை முதலான பயிா்களுக்கு ரூ. 237 காப்பீட்டு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாள் டிச. 20 ஆகும். விருதுநகா் மாவட்டத்தில் பயிா் காப்பீட்டு திட்டம் அக்ரிக் கல்சுரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி (இந்தியா) லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. பயிா் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிா் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள், தேசிய வங்கிகள் மூலம் காப்பீடு செய்ய லாம். பயிா் காப்பீடு பதிவு செய்யும் போது பட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT