விருதுநகர்

பயணிகள் நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை

16th Dec 2019 01:29 AM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தாயில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டையூா் கிராமம் உள்ளது. சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோட்டையூரில் நின்று செல்கின்றன. ஆனால், இங்குள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் சிதிலமடைந்துள்ளது. மேலும், இந்த நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைப்பதுடன், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT