சிவகாசி: சிவகாசியில் திங்கள்கிழமை காடாத் துணி தயாரிப்பு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
சிவகாசி தொழில் பேட்டையில், அசோகன் என்பவருக்கு சொந்தமான காடாத் துணி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் கழிவுப் பஞ்சு இருக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். இதில் கழிவு பஞ்சுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவினால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.