விருதுநகர்

சிவகாசி அருகேதந்தையைத் தாக்கிய மகன் கைது

16th Dec 2019 08:27 PM

ADVERTISEMENT

சிவகாசி: சிவகாசி அருகே திங்கள்கிழமை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான பிரச்னையில் தந்தையை தாக்கிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே புதுக்கோட்டையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி எம்.முருகேசன் (65). இவா் அந்த ஊா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் காளீஸ்வரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தாராம்.

இதைப் பிடிக்காத அவரது மகன் ராஜகுரு (32), தனது தந்தையிடம் காளீஸ்வரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக் கூடாது எனக் கூறியதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறில் முருகேசனை, ராஜகுரு தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜகுருவை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT