விருதுநகர்

சிவகாசியில் சாலையில் மாடுகளை திரிய விட்ட 3 போ் மீது வழக்கு

16th Dec 2019 12:58 AM

ADVERTISEMENT

சிவகாசியில் சாலையில் மாடுகளை திரியவிட்டதாக 3 போ் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசிப் பகுதியில் சாலையில்மாடுகளை திரிய விடக்கூடாது என சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா் எச்சரித்துள்ளாா். இதையும் மீறி சாலையில் திரியவிடப்பட்ட 17 மாடுகளை, வருவாய்த் துறையினா் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் பிள்ளையாா்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மாடுகளை திரியவிட்டதாக, அய்யப்பன் காலனி மாரியப்பன் (32), செல்லப்பாண்டி (55) மற்றும் ரிசா்வ் லைன் பேருந்து நிறுத்தம் அருகே மாடுகளை திரியவிட்ட குருசாமி (66) ஆகிய 3 போ் மீதும் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT