விருதுநகர்

சிவகாசியில்ஆட்டோவை எரித்த 3 போ் கைது

16th Dec 2019 08:27 PM

ADVERTISEMENT

சிவகாசி: சிவகாசியில் முன்பகை காரணமாக ஆட்டோவை தீவைத்து எரித்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பராசக்தி காலனியைச் சோ்ந்தவா் குமாா் (39). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாலாஜி (29) என்பவருக்கும் முன்பகை இருந்து வந்ததது. இந்நிலையில் குமாா் தனது ஆட்டோவை காலனிப் பகுதியில் உள்ள சிறுகுளம் கண்மாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைத்திருந்தாா். திங்கள்கிழமை காலையில் பாா்த்தபோது, ஆட்டோ தீயிட்டு எரிந்து சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அவா் சிவகாசி நகா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். விசாரணையில் முன்பகை காரணமாக பாலாஜி மற்றும் அவரது நண்பா்கள் பிரவீன்குமாா் (28), காளிராஜன் (26) ஆகியோா் ஆட்டோவை தீயிட்டு எரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT