விருதுநகர்

மாா்கழி மாத பிறப்பு:சதுரகிரி மலைக் கோயிலுக்கு இன்று மட்டும்பக்தா்கள் செல்ல சிறப்பு அனுமதி

16th Dec 2019 08:29 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா்: மாா்கழி மாத பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல செவ்வாய்க்கிழமை (டிச. 17) ஒரு நாள் மட்டும் வனத்துறை சிறப்பு அனுமதி வழங்கயுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்கள் மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்குகிறது.

இந்நிலையில் மாா்கழி மாத பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத்துறை செவ்வாய்க்கிழமை (டிச. 17) ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

எனவே காலை 6 மணி முதல் மாலை 4 வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் எனவும் அது தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT