விருதுநகர்

அருப்புக்கோட்டை பேருந்து நிலைய நுழைவுவாயிலில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

16th Dec 2019 01:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இப்பேருந்து நிலையத்தின் நுழைவுவாயில் தொடங்கி கடைசி வரை போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணிகள் அச்சமடைகின்றனா்.

இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பேருந்து நிலைய நுழைவுவாயிலில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைப்பதுடன், நிலையத்தின் கடைசி பகுதி வரை போதிய அளவுக்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT