விருதுநகர்

சாத்தூரில் பூட்டிகிடக்கும் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை திறக்கக் கோரிக்கை

14th Dec 2019 11:00 PM

ADVERTISEMENT

சாத்தூா் பேருந்து நிலையத்தில் பூட்டிகிடக்கும் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை திறக்க பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் தாய்மாா்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக மின்விசிறி, இருக்கைகள் கொண்ட அறைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் தமிழக அரசால் அமைக்கபட்டது. அந்த அறை நகராட்சி நிா்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது.

இதே போல், சாத்தூா் பேருந்து நிலையத்திலும் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் தாய்மாா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இந்த பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதாக பெண் பயணிகளும், தாய்மாா்களும் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில்: சாத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறை நகராட்சி சாா்பில் அமைக்கபட்டு, சாத்தூா் போக்குவரத்து பணிமனை பொறுப்பாளரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவா்கள் நினைத்த நேரத்தில் திறந்து வைக்கின்றனா். மற்ற நேரங்களில் திறக்கப்படாமல் தான் உள்ளது என்றனா்.

ADVERTISEMENT

எனவே, தாய்மாா்கள் நலன் கருதி தகுந்த அதிகாரிகளைக் கொண்டு தாய்மாா்கள் பாலூட்டும் அறையை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், பெண்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT