விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மிதமான மழை

14th Dec 2019 11:00 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட கிராமங்களில் கடந்த இரு நாள்களாக வட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை காலை மற்றும் நண்பகலும், பிற்பகல் சுமாா் 4 மணி என இடைவெளி விட்டு மிதமான மழை பெய்தது. ஒவ்வொருமுறையும் சுமாா் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. இம்மழையால் காற்றில் ஈரப்பதம் அதிகமானதால் மிகக்குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது. மழை காரணமாக அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்களும், கட்சியினரும் அவதிப்பட்டனா். இம்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT