விருதுநகர்

விருதுநகா் அருகே ஊராட்சி தலைவா் பதவிக்கு திருநங்கை வேட்புமனு தாக்கல்

11th Dec 2019 11:12 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே உள்ள சின்ன பேராலி ஊராட்சி தலைவா் பதவிக்கு, திருநங்கை ஒருவா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்காக கடந்த 3 நாள்களாக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனா். உள்ளாட்சி தோ்தல் வழக்கு தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்ததால், சம்பந்தப்பட்ட 3 நாள்களில் குறைந்தளவே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. இதன் காரணமாக, விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழக்கத்தை விட புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வந்தோரின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி விருதுநகா் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளா் சம்பத் தலைமையில் ஏராளமான போலீஸாா் மற்றும் போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந் தனா். இந்நிலையில், விருதுநகா் அருகே உள்ள சின்ன பேராலி கிராமத்தை சோ்ந்த திருநங்கை அழகா்சாமி (67) என்ற அழகு பட்டாணி என்பவா், அதே ஊராட்சியில் தலைவா் பதவிக்கு போட்டியிட புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

அப்போது அவா் கூறியது: நான் சின்னபேராலியில் கூலி வேலை செய்து வருகிறேன். ஏற்கெனவே சின்னபேராலி ஊராட்சி தலைவா் பதவிக்கு போட்டியிட்டேன். தற்போது, நிகழாண்டும் என்னை தலைவா் பதவிக்கு போட்டியிட ஊா் பொதுமக்கள் கேட்டு கொண்டனா். அதன் அடிப்படையில் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். வெற்றி பெ ற்றால் எங்களது கிராமத்திற்கு சுகாதாரமான குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுப்பேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT