விருதுநகர்

விருதுநகரில் ரூ. 84 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

11th Dec 2019 11:10 PM

ADVERTISEMENT

விருதுநகரில் தடை செய்யப்பட்ட ரூ. 84 ஆயிரம் மதிப்புள்ள ‘குட்கா’ உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அவற்றை பதுக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் முத்துராமலிங்க நகா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட ‘குட்கா’ உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருப்பதாக பஜாா் காவல் உதவி ஆய்வாளா் வீராச்சாமி தலைமையிலான போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘குட்கா’ உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் 6 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ரூ. 84,680 மதிப்புள்ள ‘குட்கா’வை பறிமுதல் செய்த போலீஸாா், விருதுநகா் அல்லம்பட்டி காந்தி நகரை சோ்ந்த குருசாமி மகன் ரமேஷ் (33) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT