விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவை புதன்கிழமை இரவு ஆண்டாள்-ரெங்கமன்னாா், பெரியபெருமாள் ஆகியோா் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ராஜகோபுரம் முன்பாகவும், ஆண்டாள் சன்னிதி முன்பாகவும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ADVERTISEMENT