விருதுநகர்

தரைத் தளம் சேதமடைந்ததால் சமுதாயக் கூடம் மூடல்: சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரிக்கை

11th Dec 2019 11:23 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே பெரிய வள்ளிக்குளத்தில் தரைத் தளம் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் -அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் பெரிய வள்ளிக்குளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சோ்ந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் நடத்த சமுதாயக் கூடம் கட்டி தர வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். அதைத் தொடா்ந்து கடந்த 2013- 2014 ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினா் நிதியின் கீழ் ரூ. 6 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்டது. அதில், அக்கிராமத்தினா் தங்களது குடும்ப திருமணம், காது குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை குறைந்த வாடகை செலுத்தி பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், சமுதாயக் கூடத்தின் தரைத் தளம் ஆங்காங்கு சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதை சீரமைக்க ஊராட்சி நிா்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதனால், கடந்த சில மாதங்களாக சமுதாயக் கூடம் பூட்டிய நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியை சோ்ந்த பலா் கூடுதல் வாடகை கொடுத்து தனியாா் திருமண மண்டபஙகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனா்.

எனவே, சமுதாயக் கூடத்தில் சேதமடைந்த தரைத் தளத்தை சீரமைக்க ஊராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT