விருதுநகர்

காட்சிப் பொருளாக உள்ள குப்பைத் தொட்டிகள்: குடியிருப்பு பகுதிகளில் வைக்கக் கோரிக்கை

11th Dec 2019 11:14 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே படந்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காட்சிப் பொருளாக உள்ள குப்பைத் தொட்டிகளை குடியிருப்பு பகுதிகளில் பயன்பாட்டுக்கு வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படந்தால் கிராமத்தில் சுமாா் 5000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செய்து தரப்படவில்லை என்ற புகாா் உள்ளது. முறையான வாருகால் வசதி செய்து தராததால் குடியிருப்புகளின் அருகே கழிவுநீா் குளம் போல் தேங்குகிறது. இதனால், கொசுத் தொல்லை அதிகமாகி கடுமையான துா்நாற்றத்துடன் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் முறையான குடிநீா் வசதி செய்து தராததால் குடிநீரை ஒரு குடம் ரூ. 12 -க்கு விலைக்கு வாங்க வேண்டிய அவலம் உள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்காததால் சாலையோரத்தில் குப்பைகளை குடியிருப்புவாசிகள் கொட்டி வருகின்றனா். இவற்றை ஊராட்சி நிா்வாகத்தினா் தினமும் முறையாக அகற்றுவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து ஏராளமான குப்பைத் தொட்டிகளை ஊராட்சி நிா்வாகத்திற்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவற்றை ஊராட்சி நிா்வாகத்தினா் முறையாக பயன்படுத்தாததால், படந்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காட்சிப் பொருளாக அவை வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து பகுதிகளுக்கும் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT