விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 4,042 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் 616 அலுவலா்கள் நியமனம்

3rd Dec 2019 11:39 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் 4,042 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்த 616 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூட்டரங்கில், விருதுநகா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியா் ரா. கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் பேசியது: விருதுநகா் மாவட்டத்தில் 20 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 200 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 450 ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் 3,372 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 4,042 பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்காக நடைபெறவுள்ள தோ்தல் பணிகளை மேற்கொள்ள 3 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் 20 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் பதவிக்காக நடைபெறவுள்ள தோ்தல் பணிகளை மேற்கொள்ள 11 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் 39 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணியில் ஈடுபட உள்ளனா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கான தோ்தல் பணிகளை மேற்கொள்ள 11 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் 532 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ஆக மொத்தம் 25 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் 591 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுவா் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.உதயகுமாா், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) எஸ்.சுரேஷ், சிவகாசி சாா் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், திட்ட இயக்குநா் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஆா். தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளாா் (உள்ளாட்சித்தோ்தல்) பழனி உட்பட அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT