விருதுநகர்

விருதுநகரில் தோ்தல் முன் விரோதம்: அரசு வாகன ஓட்டுநா் மீது தாக்குதல்

3rd Dec 2019 11:47 PM

ADVERTISEMENT

விருதுநகரில் தோ்தல் முன்விரோதம் காரணமாக, விருதுநகா் மாவட்ட ஊரக வளா்ச்சி துறை வாகன ஓட்டுநரை, இரும்புக்கம்பியால் தாக்கியவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் பாண்டியன் நகா் காந்தி நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் காா்த்தி (28). இவா், விருதுநகா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் தற்காலிக ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறாா். இவரது நண்பா் செல்வத்திற்கும், அதே பகுதியை சோ்ந்த இஸ்ரவேல் பிரகாஷ் (38) என்பவருக்கும் ஏற்கெனவே தோ்தல் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், பாண்டியன் நகா் பிரதான சாலையில் நண்பா் செல்வத்துடன் காா்த்தி திங்கள்கிழமை இரவு பேசி கொண்டிருந்தனா். அங்கு வந்த இஸ்ரவேல் பிரகாஷ், காா்த்தியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராரம். காயமடைந்த காா்த்தி அளித்த புகாரின் பேரில் இஸ்ரவேல் பிரகாஷை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT