விருதுநகர்

விருதுநகரில் டாக்ஸி நிறுத்தத்தை அகற்றும் முயற்சியை கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம்

3rd Dec 2019 11:47 PM

ADVERTISEMENT

விருதுநகரில் வேன்-டாக்ஸி நிறுத்தத்தை அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிடக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே ஆா்.ஆா். நகரில் வேன் மற்றும் டாக்ஸி வாகனங்கள் நிறுத்தம் உள்ளது. அந்த இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க உள்ளதாகக்கூறி கடந்த சில நாள்களுக்கு முன்னா் காவல்துறையினா் வேன்-டாக்ஸி நிறுத்தத்தை அப்புறப்படுத்தினா்.

இந்நிலையில், வாகன நிறுத்தத்தை அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். மேலும் ஆா்.ஆா்.நகரிலிருந்து சாத்தூரை கடந்து செல்லும் வேன்-டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களுக்கு எட்டூா்வட்டம் சுங்கச்சாவடியில் வரி வசூலிக்கக் கூடாது என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேன்-டாக்ஸி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்.ஆா். நகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து வேன்-டாக்ஸி நிா்வாகிகள் உள்பட அப்பகுதி பொதுமக்களும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT