காரியாபட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட 35 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக விளையாட்டு அலுவலர்கள் தெரிவித்தனர்.
காரியாபட்டி ஒன்றியத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடை பெற்றது. இதில், 35 பள்ளிகளை சேர்ந்த 302 மாணவர்களுக்கு ஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வாலிபால், கால்பந்து, கபடி, கோ-கோ, செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் இடங்களை பெறும் மாணவர்கள், வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிக்கான ஏற்பாடுகளை கம்பாளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் செய்திருந்தார்.